Home Uncategorizedபெங்களுரில் இருந்து இறக்குமதியாகும் கஞ்சா! விசாரணையில் அம்பலமான உண்மை

பெங்களுரில் இருந்து இறக்குமதியாகும் கஞ்சா! விசாரணையில் அம்பலமான உண்மை

by bait
0 comments

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையும் போதைபொருள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் சட்ட விரோதமாக   குட்கா விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பெட்டி கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்யவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து கண்காணிப்பில் இறங்கிய காவல்துறை, பார்த்திபன் என்பவரை தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் பொறி வைத்து பிடித்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் மொத்த விற்பனையாளரான மங்கல்ராம் (29) மற்றும் சிவபெருமாள் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பை அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1300 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு குட்கா விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் . மேலும், போலீசார் விசாரணையில் கைது செய்ய பட்ட மூன்று பேரும்

banner

பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி தாம்பரத்தில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

தகவல் : ZEENEWS

You may also like

Leave a Comment