Home Uncategorizedதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

by bait
0 comments

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது அகால மறைவால் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு தொகுதியில் கடும் போட்டி இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் வரவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. இந்த 2 கட்சிகளை தவிர 46 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

banner

அனைவரும் வாக்களிக்கும் விதமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் பிப்ரவரி 3 முதல் 5 வரையிலும், பிப்ரவரி 8ம் தேதி வரையிலும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

தகவல் : ZEENEWS

You may also like

Leave a Comment