Home Uncategorizedcheck-கஞ்சா போதையில் பெற்ற தாயை கொலை செய்து வீட்டில் புதைத்த மகன்

check-கஞ்சா போதையில் பெற்ற தாயை கொலை செய்து வீட்டில் புதைத்த மகன்

by bait
0 comments

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (45) கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

இதில் இளைய மகன் சேவாக் (வயது 21) போக்சோ வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ந் தேதியன்று கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாய், மகன் இருவரையும் காணவில்லை. இதில் சந்தேகமடைந்த உறவினர்கள், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பல பகுதிகளில் ரத்த கரை படிந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டில் கிடந்த பாயில் ரத்தக்கரை இருந்துள்ளது.

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேவாக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் சரியான தகவல் அளிக்காததால் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

banner

இதையடுத்து வருவாய்த்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் திட்டக்குடி வட்டாட்சியர் முன்பு வீட்டில் புதைக்கப்பட்டுள்ள பெண்ணின் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்காக வருவாய்த் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சேவாக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் பெற்ற தாயை மகனே கொலை செய்து வீட்டில் புதைத்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : RAJNEWS

You may also like

Leave a Comment