Home Uncategorizedதலைக்கேறிய மதுபோதை.. பெட்ரோல் பங்க் ஊழியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை.. கோவையில் பரபரப்பு

தலைக்கேறிய மதுபோதை.. பெட்ரோல் பங்க் ஊழியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை.. கோவையில் பரபரப்பு

by bait
0 comments

கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மது, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக காவல் துறை சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுபோன்ற செயல்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் காளிமுத்து என்பவரை லாரி ஓட்டுநர்கள் இரும்பு ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சரக்குகளை லாரி மூலமாக ஏற்றி வந்துள்ளனர். இந்த லாரியை ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஓட்டி வந்துள்ளனர். கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு லாரியை திருப்ப முயன்றுள்ளனர். அப்போது, விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

banner

இதையடுத்து, அங்கிருந்த பங்க் ஊழியர் காளிமுத்து ஓட்டுனரை எச்சரித்துள்ளார். இதனால், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பங்க் ஊழியர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், லாரி ஓட்டுநர்கள் இருவரும் அப்பகுதியில் இருந்து சென்றுள்ளனர். தொடர்ந்து, இரவு 12 மணியளவில் ஓட்டுநர்கள் இருவரும் பெட்ரோல் பங்கிற்கு திரும்பவந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் காளிமுத்துவை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில், காளிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

காளிமுத்துவை கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் லாரி ஓட்டுநர்கள் தலைமறைவாகி உள்ளனர். காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த ஓட்டுனர்களை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்வதற்காகச் சென்றபோது அவர்கள் இருவரும் தப்ப முயன்றுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.

லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : ONEINDIA

You may also like

Leave a Comment