Home Uncategorizedசென்னை: மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது

சென்னை: மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது

by bait
0 comments

சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலை, மதுரவாயல் பைப்பாஸ் சாலையில் மெத்தபெட்டமைன், போதைப் பொருளை காரில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் கேரளாவைச் சேர்ந்த சனோஜ் அப்பிசிரா வலப்பில் (40), ரஹீஸ் (27), சுபின் ஷா (26), அப்துல் ஷெரிப் (36) என்பதும், பெங்களூரில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் அவர்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 61.4 கிராம் மெத்தபெட்டமைன் கார், 7 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment