ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில், மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக சித்தோடு காவல்துறையினருக்கு தெரிய வந்ததை அடுத்து ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகாவை (65) என்ற மூதாட்டியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மூதாட்டி திலகா அளித்த தகவலின் பேரில் சந்தோஷ்குமார் (20) என்பரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அங்கு 90 போதை மாத்திரைகள், ஊசிகள், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தகவல் : PUTHIYATHALAIMURAI