Home Uncategorizedதென்காசி| குற்றாலத்திற்கு வந்தபோது மது போதையில் அட்டூழியம் – ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அடி உதை!

தென்காசி| குற்றாலத்திற்கு வந்தபோது மது போதையில் அட்டூழியம் – ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அடி உதை!

by bait
0 comments

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், யோகேஸ்வரன், சூர்யா, இளங்கோ, ஆகிய நான்கு பேரும் காரில் குற்றாலத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு குளித்துவிட்டு ராமேஸ்வரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சங்கரன்கோவில் வழியாகச் சென்ற அவர்கள் உணவகம் அருகே காரை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து மதுபோதையில் இருந்த நான்கு பேரும் எதிரே வந்த காருக்கு வழி விடாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உணவகம் அருகே இருந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது சமாதானம் செய்ய முயன்ற பெரியவர்களை அடித்து கீழே தள்ளியள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த இளைஞர்கள், கீழே விழுந்தவரை தூக்கி அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர். இதையடுதது உள்ளூர் இளைஞர்களையும் அவர்கள் தாக்கத் துவங்கியதால் பதிலுக்கு உள்ளூர் இளைஞர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment