Home Uncategorizedசென்னை: வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை – இருவர் கைது… 655 மது பாட்டில்கள் பறிமுதல்

சென்னை: வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை – இருவர் கைது… 655 மது பாட்டில்கள் பறிமுதல்

by bait
0 comments

சென்னை பூக்கடை பர்மா பஜாரில் சிலர் வெளிநாட்டு மதுபானங்களை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்குப் பிரிவு போலீசார், பூக்கடை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் ஐந்து கடைகளில் இருந்து 655 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த நாகநாதன் மற்றும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணராமன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment