Home Uncategorizedசென்னை: IIT மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இரு வடமாநில இளைஞர்கள் கைது

சென்னை: IIT மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இரு வடமாநில இளைஞர்கள் கைது

by bait
0 comments

சென்னை தரமணி 5சி பேருந்து நிலையம் அருகில் ஐஐடி மாணவர்களுக்கு வட மாநிலத்தை சேர்ந்த சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தரமணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தரமணி தனிப்படை காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகில் வசிக்கும் வட மாநில இளைஞர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்த தைப்பூர் ரஹ்மான் (25), பிரஃபுல்லா குமார் ஜெனா (30), என்பதும், இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ஐஐடி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment