Home Uncategorizedசிதம்பரம் | ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் | ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

by bait
0 comments

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சார்லப்பள்ளி என்ற இடத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றிரவு கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசார், ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டி ஒன்றில் ஒரு சாக்கு முட்டை கேட்பாரற்றுக் கிடந்தது. இது யாருடையது என போலீசார் கேட்டபோது யாரும் அதற்கு உரிமை கோரவில்லை. பின்னர் சாக்கு மூட்டையை இறக்கிய போலீசார் அதை பிரித்துப் பார்த்தனர். அப்போது அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment