Home Uncategorizedசேலம் | சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் – வடமாநில இளைஞர் கைது

சேலம் | சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் – வடமாநில இளைஞர் கைது

by bait
0 comments

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா அம்ரோல், கடந்த சில மாதங்களாக, திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், சொந்த ஊருக்குச் சென்ற அவர், மீண்டும் திருப்பூர் வந்துள்ளார். அப்போது, விஜயவாடா சென்று அங்கிருந்து இரண்டு பெரிய பைகளை கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், அந்த நபரை ஓமலூர் பஸ் நிலையத்தில் மடக்கிய போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை நடத்தினர். சோதனையில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருப்பூருக்கு கஞ்சா கொண்டு செல்வதாக போலீசில், கிருஷ்ணா அம்ரோல் தெரிவித்தார்.

மேலும், அங்கு மாணவர்கள், தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கிருஷ்ணா அம்ரேலை சிறையில் அடைத்தனர்.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment