Home Uncategorizedமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இருவர் கைது

by bait
0 comments

சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் சத்தியமங்கலம்-அத்தாணி ரோடு, வடக்கு பேட்டை திப்பு சுல்தான் ரோடு செல்லும் சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்இருவர் வந்து கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் வண்டியைத்திருப்ப முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27), புவனேஸ்வரன் (39) ஆகியோர் என்பதும், அவர்கள் வண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. வண்டியை சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ. 1,200-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தகவல் : NAKKHEERAN

banner

You may also like

Leave a Comment