Home Uncategorizedவடக்கன்குளம் அருகே மதுபோதையில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்- போலீசார் விசாரணை

வடக்கன்குளம் அருகே மதுபோதையில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்- போலீசார் விசாரணை

by bait
0 comments

தாக்குதல் நடத்திய  காட்சிகள் அனைத்தும் ஹார்டுவேர் கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது

வடக்கன்குளம் அருகே பெத்தரெங்க புரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் அருகே உள்ள சிவசுப்ரமணிய புரத்தை சேர்ந்தவர் ராபின். இவர் வடக்கன்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார்.அப்போது அவருக்கும் அங்கு மது குடித்து கொண்டிருந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் கை கலப்பாக மாறியதால் அங்கிருந்து ராபின் சென்றிருக்கிறார். இதனையடுத்து, ராபிணை பின் தொடர்ந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.இதிலிருந்து தப்பிக்க அருகில் உள்ள ஹார்டுவேர் கடைக்கு சென்ற அவரை கையில் கிடைத்த ஆயுதங்களை வைத்து ராபினை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுள்ளது கும்பல்.காயம் அடைந்த ராபின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

banner

மேலும்  தாக்குதல் நடத்திய  காட்சிகள் அனைத்தும் ஹார்டுவேர் கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.இக்காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் : KUMUDAM

You may also like

Leave a Comment