Home Uncategorizedமதுபோதையில் பாட்டியை கொலை செய்த பேரன்… தானும் தூக்கிட்டு தற்கொலை…

மதுபோதையில் பாட்டியை கொலை செய்த பேரன்… தானும் தூக்கிட்டு தற்கொலை…

by bait
0 comments

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மதுபோதையில் பாட்டியை கொலை செய்த பேரன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவட்டார் அருகேயுள்ள மேலோட்டு விளை, சாரூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி தாசம்மாள் (80). இவரது கணவர் பத்ரோஸ் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் புஷ்பராஜ், மனைவியை பிரிந்த ஏக்கத்தில் சமீபத்தில் இறந்துவிட, புஷ்பராஜின் மகன் அஜித் (23) பாட்டி தாசம்மாளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

பெயிண்டரான அஜித், தினமும் வேலைக்கு சென்று வரும் நிலையில், அவருக்கு பாட்டி தாசம்மாள் தான் சமையல் செய்து கொடுத்தனுப்பி வந்துள்ளார். இதனிடையே தாசம்மாள் பெயரில் இருக்கும் 15 சென்ட் நிலத்தை தன் பெயருக்கு மாற்றக்கோரி, அஜித் தினமும் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்றும் நண்பருடன் சேர்ந்து பாட்டியிடம் மதுபோதையில் தகராறு செய்த அஜித்தை அக்கம்பக்கத்தினர் விரட்டியடித்துள்ளனர். அப்போது  பாட்டியை இன்னைக்கே கொலை செய்து விடுவேன் எனக்கூறிவிட்டு, அஜித் சென்றுள்ளார்.

பின்னர் 11 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்து பாட்டியிடம் தகராறு செய்த அஜித், ஆவேசமடைந்து பாட்டியை தள்ளிவிட்டுள்ளார். அதில் தாசம்மாளின் தலை சுவரில் மோதியதில், அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  இந்நிலையில், எதிர்பாராமல் தள்ளிவிட்டதில் பாட்டி இறந்ததால், அஜித், பயத்தில், பக்கத்து ரூமுக்கு சென்று வேட்டியை எடுத்து உத்திரத்தில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

banner

தாசம்மாளின் அண்ணன் மகன் வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : KUMUDAM

You may also like

Leave a Comment