Home Uncategorizedம.பி.யில் பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

ம.பி.யில் பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

by bait
0 comments

ம.பி.யில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு மது வினியோகிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ம.பி.யின் கட்னி மாவட்டம் பர்வாரா ஒன்றியம் கிரஹானி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் ஒரு அறையில் உள்ள சிறுவர்களுக்கு கோப்பைகளில் மதுபானம் வழங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதை குடிப்பதற்கு முன் அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுமாறு மாணவர் ஒருவரிடம் அந்த ஆசிரியர் கூறுவதை வீடியோவில் கேட்க முடிகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் யாதவ், அந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தவறான நடத்தை, மது அருந்த குழந்தைகளை ஊக்குவித்தல், ஆசிரியரின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், ம.பி. சிவில் சர்வீசஸ் நடத்தை விதிகளின் கீழ் லால் பிரதாப் சிங் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

banner

தகவல் : KAMADENU

You may also like

Leave a Comment