Home Uncategorizedதிருச்சியில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

திருச்சியில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

by bait
0 comments

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த ஆல்டோ மடக்கி சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால், போலீசார் காரை சோதனையிட்டதில் பண்டல் பண்டலாக கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் கடத்தி வந்த ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

banner

மேலும் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன், கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment