போலீசார் விசாரணையில் அவர் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

புதுச்சேரி அடுத்த கிளியனூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப் படை போலீசார், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது கஞ்சாவை பாக்கெட் போட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்ல இருந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் வயது 27 என்பதும், ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை பாக்கெட் போட்டு அருகே உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் புதுவை சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, எடை மெஷின், ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தகவல் : INDIANEXPRESS
