Home Uncategorizedசென்னை: கஞ்சா ரெய்டு நடந்த கல்லூரியில் மாணவர் மரணம்; மாடியில் இருந்து குதித்தார்

சென்னை: கஞ்சா ரெய்டு நடந்த கல்லூரியில் மாணவர் மரணம்; மாடியில் இருந்து குதித்தார்

by bait
0 comments

போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சில தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அருகே பொத்தேரி- காட்டாங்குளத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்களிடையே போதைப்புழக்கம் நடந்து வருவதாக தாம்பரம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளிலும், வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கஞ்சா, போதை சாக்லெட், போதை ஊசிகள், போதை மாத்திரைகள் என பல வகைகளில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகக் காவல்துறையினருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது.

banner

இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அதிகாலையில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment