கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் குறிப்பாக கடந்த சில மாதங்களில் நடைபெற்ற “Storming Operation”களில் கல்லூரி மாணவர்ள் இடையே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்கும் வகையில் நடைபெற்ற கஞ்சா வேட்டையும், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட குற்றவாளிகளை கண்டறியும் பொருட்டும், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் செயல்களை கண்டறியும் பொருட்டும் தாபாக்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல “Storming Operation”கள் அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் “Operation – Drug Free கோவை” என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடந்த நாட்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 927 நபர்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பட்டியல் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலானது தரவுகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, இந்த அதிரடி வேட்டை கோவை மாவட்டத்தில் 89 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் தேவையான வழிமுறைகள் ( SOP ) வழங்கப்பட்டது. முக்கியமாக 761 நபர்கள் தேடுதல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 461 நபர்கள் நேரடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 289 நபர்கள் தற்போது மாவட்டத்தில் இல்லாதவர்கள் என உறுதி செய்யப்பட்டது. 11 நபர்கள் இறந்து விட்டதாக தகவல் உறுதி செய்யப்பட்டது.
தகவல் : INDIANEXPRESS
