Home Uncategorizedநாட்டை உலுக்கிய சம்பவம்! கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி, 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாட்டை உலுக்கிய சம்பவம்! கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி, 3000க்கும் மேற்பட்டோர் கைது!

by bait
0 comments

எத்தில் ஆல்கஹாலுக்கு பதிலாக மெத்தில் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

Hooch toll 99, over 3,000 held: Illicit liquor sold at weddings, prayer meets – கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி! 3000 நபர்களுக்கும் மேற்பட்டோர் கைது!

உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் கள்ளச்சாராயம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். இதனைத் தொடர்ந்து சாராயம் அருந்திய அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர்.

இதே போன்று, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூா் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தியதில் பல உயிரிழந்தனர். மலிவான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம் 10 ரூபாய், 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால், அதிக அளவிலான மக்கள் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கின்றனர். இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தமாக இரு மாநிலங்களிலும் சோ்த்து கள்ளச்சாராயத்தால் 70 போ் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் 99க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஹாரன்பூரில் 59 பேரும், குஷிநகரில் 10 பேரும், ஹரித்வாரில் 30 பேரும் பலியாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment