கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பி என்பவர் கைது. 1,000 லிட்டர் மெத்தனால் விற்றது விசாரணையில் அம்பலம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த 13-ம் தேதி அளவில் பலர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். கள்ளச் சாராயம் அருந்திய நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக விழுப்புரத்தில் 14 பேரும், செங்கல்பட்டில் இதுவரை 8 பேரும் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், சீமான் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார்.
தகவல் : INDIANEXPRESS
