Home Uncategorizedவிஷச்சாராய தடுப்பு நடவடிக்கை: 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது; 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல்

விஷச்சாராய தடுப்பு நடவடிக்கை: 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது; 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல்

by bait
0 comments

கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது பாரபட்சமின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் ஆலைகளை தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பி-க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 184 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் இன்று காலை நிலவரப்படி 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்

banner

100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment