சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கை வழியாக மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது. ஆனால் மானாமதுரைக்கு போகாமல் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே வந்து நின்றது. இதனால் பதட்டமடைந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கி நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் இது குறித்து கேட்டபோழுது, நடத்துனர் பதில் பேசாத நிலையில் ஓட்டுநரிடம் சென்று கேட்டபோழுது, ஓட்டுநர் மது போதையில் இருந்ததை கண்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் தகவல் தெரிவித்தபோழுது, அங்கிருந்த நேரக் காப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் நடத்துனரை விட்டுவிட்டு, பேருந்தை ஓட்டுநர் மனோகரன் மீண்டும் இயக்கி, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே பேருந்தை எடுத்து மதுரை செல்லும் சாலையில் நிறுத்திவிட்டார். இதனால் பதட்டம் அடைந்து திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, போலீசார் வந்து பேருந்தை மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறுத்த சொல்லியதோடு மட்டுமல்லாமல், பேருந்தை விட்டு மனோகரனை இறங்கவும் கூறினர். ஆனால் ஓட்டுநர் மனோகரன் கீழே இறங்க மறுத்து, தானே மானாமதுரைக்கு பேருந்து இயக்குவதாக கூறினார்.
தகவல் : GETLOKALAPP
