Home Uncategorizedஅடையாறில் கஞ்சா விற்ற ஒடிசாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்

அடையாறில் கஞ்சா விற்ற ஒடிசாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்

by bait
0 comments

வேளச்சேரி: அடையாறு சாஸ்திரி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அடையாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோதுசந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால்அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சரோஜ் பந்து தாஸ் (49)லிபன் குமார் தாஸ் (37) எனவும்இவர்கள் அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகவல் : DINAKARAN

You may also like

Leave a Comment