Home Uncategorizedமதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by bait
0 comments

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சென்னை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில்

‘வீடியோ கேம்’ விளையாடி விட்டு ராஜாராமன் கிளம்ப தயாரான நேரத்தில் அவருடன் ராக்கி, அய்யப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ராஜாராமன் மயங்கினார்.

சுய நினைவு இல்லாமல் கிடந்த அவர் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து எழும்பூர் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் உயிரிழந்த நிலையில் தப்பியோடிய நண்பர்கள் ராக்கி, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

banner

தகவல் : DAILYTHANTHI

You may also like

Leave a Comment