Home Uncategorizedதஞ்சாவூர் பாரில் மது அருந்திய 2 பேர் மரணம் – நடந்தது என்ன?

தஞ்சாவூர் பாரில் மது அருந்திய 2 பேர் மரணம் – நடந்தது என்ன?

by bait
0 comments

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது.தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை.டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார்.பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க மீன் மார்க்கெட்டிற்குச் சென்றார். அங்கு சென்ற சில சிறிது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளி கவலைக்கிடமான நிலை ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தகவல் : BBC

You may also like

Leave a Comment