உயர் ரக கஞ்சா பயன்படுத்திய 2 மலையாள இயக்குநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை கேரள ஊழியர்கள் சம்மேளனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

உயர் ரக கஞ்சா பயன்படுத்திய 2 மலையாள இயக்குநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை கேரள ஊழியர்கள் சம்மேளனம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘உண்டா’, ‘லவ்’, ‘தள்ளுமலா’ ஆகிய படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘ஆலப்புழா ஜிம்கானா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல, ‘தமாஷா’, ‘பீமண்டே வழி’, ‘சுலைக்கா மன்ஜில்’ ஆகிய படங்களை இயக்கியவர் அஷ்ரஃப் ஹம்சா.
இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் உயர் ரக கஞ்சாவை பயன்படுத்தியதாக கலால் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை தவிர அங்கிருந்த வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வீடு ஒளிப்பதிவாளர் சமிர் தாஹிருக்கு சொந்தமானது என்பதால் அவரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் : NEWS18TAMIL