Home Uncategorizedவைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

by bait
0 comments

 தேனியில் உள்ள வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள் வீசப்பட்டு இருப்பதால் நீர்நிலை பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கரட்டுப்பட்டியில் இருந்து வைகை அணையின் இடது கரை பகுதிக்கு மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.

அங்குச் செல்லும் நபர்கள் மதுபாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்வதால் நீர்நிலை பாதிப்படைவதாகவும், அதி காலை நேரங்களில் நடந்து செல்லும் மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

எனவே கரை ஓரப்பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

தகவல் : TAMILJANAM

You may also like

Leave a Comment