வீரபாண்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடேந்திரபுரம் பகுதியில் சிவகாமி என்பவரும், வயல்பட்டி பகுதியில் ராக்கம்மாள் என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.