Home Uncategorizedவடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தல்: கோவையில் போலீஸ் சோதனையில் 10 பேர் சிக்கியது எப்படி?

வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தல்: கோவையில் போலீஸ் சோதனையில் 10 பேர் சிக்கியது எப்படி?

by bait
0 comments

வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் கோவை மாநகர போலீசார், ரயில்வே போலீசார் இணைந்து வட மாநிலத்திலிருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் அந்த ரயிலில் பயணித்த  பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன.

banner

இதில் சுமார் 50 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை பிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment