லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடந்த நேற்று மது அருந்திவிட்டு வந்த மணிகண்டன் மனைவி நதியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது அவர் கண்டித்ததாக தெரிகிறது இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.