Home Uncategorizedரயில் கழிவறையில் கேட்ட விநோத சத்தம்… சோதனையிட்ட ரயில்வே போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ரயில் கழிவறையில் கேட்ட விநோத சத்தம்… சோதனையிட்ட ரயில்வே போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

by bait
0 comments

ரயில் பெட்டிக்குள் பதுக்கிய கடத்தல்காரர்கள் யார் என்பதை ரயில்வே போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பலத்த பாதுகாப்பையும் மீறி ரயிலுக்குள் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் ரயில்வே போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது திருவிழா காலம் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ரயில்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரயில்களில் தினசரி சோதனை நடத்தப்படுகிறது.

RP மற்றும் RPF போலீசார் ஒரே நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் முரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் S 4 மற்றும் S 5 பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் இருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து இந்த சத்தம் கேட்டதால் அங்கிருந்த பயணிகள் போலீசாரை அலெர்ட் செய்தனர்.

banner

இதைத் தொடர்ந்து 2 பெட்டிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. ரயில்வேயில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், எப்படி இந்த கஞ்சா பொட்டலங்கள் ரயிலுக்குள் வந்தன என்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயிலில் இருந்த அனைத்து கழிவறைகளிலும் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இருப்பினும் கஞ்சா பொட்டலங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.

இவற்றை ரயில் பெட்டிக்குள் பதுக்கிய கடத்தல்காரர்கள் யார் என்பதை ரயில்வே போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில்வே நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் தேடி வருகின்றனர்.

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment