Home Uncategorizedயாசகம் பெற்ற பணம் சார்” – ரூ.1.50 லட்சம் பணத்துடன் மதுபோதையில் தள்ளாடிய பெண்!

யாசகம் பெற்ற பணம் சார்” – ரூ.1.50 லட்சம் பணத்துடன் மதுபோதையில் தள்ளாடிய பெண்!

by bait
0 comments

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நல்லூர் சர்ச் அருகே நேற்று மாலை 36 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடிய படி, சேலையில் சுற்றப்பட்டிருந்த மூன்று கட்டு பணத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். அதே சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த கடைக்காரர்கள் , “மது போதையில் தள்ளாடும் அந்த பெண் அதிகப் பணம் வைத்துள்ளார்” என போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் சோதனை நடத்தியதில், உரிய ஆவணம் இல்லாமல் அவர் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்திருந்தருந்தது தெரியவந்தது. அதை உடனடியாக போலீசார் பறிமுதல் செய்து, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைக் கருவூலத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள காப்பாத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் : PUTHIYATHALAIMURAI

banner

You may also like

Leave a Comment