Home Uncategorizedமொடக்குறிச்சி அருகே மது, கஞ்சா விற்ற 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே மது, கஞ்சா விற்ற 4 பேர் கைது

by bait
0 comments

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக அவல்பூந்துறை குமரன்நகரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோடு காளியூர் பிரிவு பகுதியில் மது விற்றதாக வாணிப்புத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுரேஷ் (38) என்பவரையும், டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் மொபட்டில் மது விற்றதாக பெரிய கொடிவேரி வேட்டுவன்புதூரை சேர்ந்த சின்னமாதப்பன் (60) என்பவரையும் பங்களாப்புதூர் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 73 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கடம்பூர் மாக்கம்பாளையத்தை அடுத்த குட்டைமுக்கு பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்றதாக பர்கூர் குட்டையூரை சேர்ந்த மாதவன் (32) என்பவரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தகவல் : GETLOKALAPP

banner

You may also like

Leave a Comment