தோண்ட தோண்ட சாராயம்; மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூன்று பெண்கள் கைது

Chennai Marina beach liquor sale 3 woman arrested: சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்கப்படுவதாகவும், அதுவும், கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் காவல்துறை கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்த 32 லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தகவல் : INDIANEXPRESS
