Home Uncategorizedமெஞ்ஞானபுரம் அருகே சாராயம் ஊறல் போட்டவர் கைது

மெஞ்ஞானபுரம் அருகே சாராயம் ஊறல் போட்டவர் கைது

by bait
0 comments

உடன்குடி, ஜூன் 26: மெஞ்ஞானபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டவரை போலீசார் கைது செய்தனர்.  மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் காபிரியேல்(47), கூலி தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தான் குடிப்பதற்காக சொந்தமாக சாராயம் வடித்து குடிக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர், தனது வீட்டிலேயே பழங்கள் மற்றும் சாராயத்திற்கான மூலப்பொருட்களை தண்ணீரில் போட்டு ஊறல் வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார், காபிரியல் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது நடந்த சோதனையில் சுமார் 20 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து காபிரியேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : DINAKARAN

banner

You may also like

Leave a Comment