சென்னை பெருங்குடியில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனே குழிதோண்டிப் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் சென்னை மந்தவெளியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் குப்பை பெருக்கும் வேலை செய்து வருகின்றனர். குப்பைக் கிடங்கு அருகில் படர்ந்துள்ள முட்புதரில் ஒரு குடிசை அமைத்து அதில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் வெளியே சென்ற நவீன் வீடு திரும்பியபோது லட்சுமி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். யாரிடம் செல்போன் பேசுகிறாய் என நவீன் லட்சுமியிடம் கேட்டபோது வேலை சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன் எனக் கூறியுள்ளார். உடனே லட்சுமியின் செல்போனை வாங்கி நவீன் பேசியபோது எதிர் தரப்பில் பேசிய நபர் அமைதியாகப் பேசாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த நவீன் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவல் : NEWS18TAMIL
