Home Uncategorizedமது போதையில் தகராறு செய்த கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது?

மது போதையில் தகராறு செய்த கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது?

by bait
0 comments

மதுரை திருநகரில் பாண்டியராஜன் மீது விஜயலட்சுமி இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு கணவனை மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை பெரியார் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாண்டியராஜன் பூ மற்றும் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பாண்டியராஜன், மனைவி விஜயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பாண்டியராஜன் மனைவியை அடித்து கீழே தள்ளியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் பொறுமையிழந்த விஜயலட்சுமி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து பாண்டியராஜனின் பின்னந்தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment