Home Uncategorizedமது போதையில் சாலை விபத்து ஏற்படாது!! மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கருவி…

மது போதையில் சாலை விபத்து ஏற்படாது!! மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கருவி…

by bait
0 comments

Alcohol Detection Device| மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கான கருவியை தனியார் பள்ளி மாணவர் கண்டுபிடித்து காட்சிக்கு வைத்தது அனைவரின் கவனத்தை பெற்றது. 

விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கான கருவியை தனியார் பள்ளி மாணவர் கண்டுபிடித்து காட்சிக்கு வைத்தது அனைவரின் கவனத்தை பெற்றது.

இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அந்த வகையில் விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் , 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமான நடைப்பெற்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment