Home Uncategorizedமது பாட்டிலில் எவ்வளவு குடிக்கலாம் என குறிப்பிட முடியாது – மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்

மது பாட்டிலில் எவ்வளவு குடிக்கலாம் என குறிப்பிட முடியாது – மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்

by bait
0 comments

உத்தரவுசென்னை உயர் நீதிமன்றம், மது பாட்டிலில் எவ்வளவு அளவுக்கு மது குடிக்கலாம் என குறிப்பிட முடியாது என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது.

மது பாட்டிலில், எவ்வளவு அளவுக்கு மது குடிக்கலாம் என குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஏ.ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், டாஸ்மாக் மது பாட்டில்களில் எவ்வளவு அளவுக்கு குடிக்கலாம் என குறிப்பிட வேண்டும்; மதுவால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், குழந்தையின்மை, இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது. மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என மது பாட்டிலில் குறிப்பிட்டுள்ளது. மதுவினால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டது.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment