Home Uncategorizedமதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை: நாமக்கல்லில் இருவருக்கு 3 ஆயுள் தண்டனை

மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை: நாமக்கல்லில் இருவருக்கு 3 ஆயுள் தண்டனை

by bait
0 comments

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஆறுமுகம் (வெள்ளை சட்டை), ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சரவணன் (புளு சட்டை)

நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே இருகூர் ஊராட்சி சுப்பையாபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (35), செந்தில்குமார் (42), தூய்மைப் பணியாளர் சரவணன் (44) ஆகிய 4 பேரும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி இருக்கூர் ஊராட்சி அலுவலகம் அருகே மது அருந்தியுள்ளனர்.

பின் நான்கு பேரும் வீடு திரும்பியுள்ளனர். இச்சூழலில் தியாகராஜன் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

banner

எனினும், அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிட் கலந்த மதுவை தியாகராஜன், செந்தில்குமாரும் குடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை தனது மனைவிக்கு விட்டுக் கொடுக்காதாதல் செந்தில்குமாருக்கு ஆசிட் கலந்த மதுவை ஆறுமுகம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

இம்மதுவை செந்தில்குமாருடன் வந்த தியாகராஜனும் குடித்ததால் அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இருக்கூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர் சரவணன் (44) ஆகிய இருவரையும் பரமத்தி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று அதன் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி ஆறுமுகம், சரவணன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.

தகவல் : KAMADENU

You may also like

Leave a Comment