மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நகரில் கஞ்சா போதையில் கார் கண்ணாடிகளை உடைத்த ராஜ சஞ்சய், முத்துப்பாண்டி, கணேஷ் கைது செய்யப்பட்டனர்.
கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள்
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கஞ்சா போதையில் கார் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்துள்ள நரசிங்கம் நகரில் நள்ளிரவில் கஞ்சா குடிக்க வந்த இளைஞர்கள் மூவர், கண்ணில் தென்பட்ட சொகுசு கார்களை கண்டதும் வெறி பிடித்தது போல அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் கார் கண்ணாடிகளை கைகளால் அடித்து உடைக்க முயன்றவர்கள், கீழே கிடந்த கல்லை தூக்கி கார்கள் மீது போட்டு கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
தகவல் : NEWS18TAMIL
