Home Uncategorizedcheck-மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

check-மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

by bait
0 comments

சென்னையில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் பகுதிக்குட்பட்ட பஜார் சாலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக மற்றொரு இரு சக்கரத்தில் மது போதையில் வந்த மூன்று இளைஞர்கள் அதிவேகமாக சென்ற மோதியதில் அந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த அந்த மூன்று நபர்களும் விபத்தை ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்ட நபரை அவரின் மனைவி மற்றும் குழந்தையின் கண்ணெதிரே தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், மது போதையில் ரகளை ஈடுபட்ட அந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த இளைஞர்கள் அங்கு இருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

banner

மேலும் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் தப்பி ஓடிய அந்த இளைஞர்களின் வாகன எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அந்த மூன்று இளைஞர்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : RAJNEWS

You may also like

Leave a Comment