Home Uncategorizedமதுபோதையில் தகராறு; உயிர் நண்பனின் உயிரை எடுத்த வாலிபர்!

மதுபோதையில் தகராறு; உயிர் நண்பனின் உயிரை எடுத்த வாலிபர்!

by bait
0 comments

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மொரோல் பகுதியை சேர்ந்தவர் ராகுல் கெய்குவாட். இவர் தனது நண்பர் சுஷாந்த் கெய்குவாட் (22) என்பவருடன் அவ்வப்போது ஒன்றாக மது குடித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுஷாந்த் அருகில் கிடந்த கல்லை கொண்டு ராகுல் முகத்தில் தொடர்ந்து தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் ராகுல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் ராகுலை கொலை செய்து விட்டதாக சுஷாந்த் தனது மற்றொரு நண்பனுக்கு செல்போனில் மெசெஜ் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மது தப்பியோடிய சுஷாந்தை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சுஷாந்தை நேற்று கைது செய்தனர்.

தகவல் : GETLOKALAPP

banner

You may also like

Leave a Comment