கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி முடக்குச்சாலையை சேர்ந்தவர் கண்ணதாசன் (47). இவர் முடக்கு சாலை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது விற்ற கண்ணதாசன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 8840 மில்லி லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.