Home Uncategorizedமகள் கண் முன்னே.. கியாஸ் சிலிண்டரை மனைவியின் தலைலேயே தூக்கி போட்ட கணவன்

மகள் கண் முன்னே.. கியாஸ் சிலிண்டரை மனைவியின் தலைலேயே தூக்கி போட்ட கணவன்

by bait
0 comments

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம், கரிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. மதுசூதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையிலேயே கியாஸ் சிலிண்டரைபோட்டுள்ளார் மதுசூதனன்… கொல்லம் நகரை ஆடிப்போக வைத்த சம்பவம் பற்றி பார்ப்போம்
கேரள மாநிலம் கொல்லம், கரிக்கோடு பகுதியில் 54 வயதாகும் மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கவிதாவுக்கு 46 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. மதுசூதனனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது.


 Husband arrested for throwing gas cylinder at wife s head in Kollam city Kerala

நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி தட்டி கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த மதுசூதனன், மனைவி கவிதாவை மிதித்து கீழே தள்ளியிருக்கிறார். அப்போது தடுக்க சென்ற மகளையும் அவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் கீழே விழுந்து கிடந்த கவிதாவின் தலையில் கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்டார். இதில் தலை சிதைந்து கவிதா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை எல்லாம் கண் முன்னே பார்த்த மகள் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கவிதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு ஆடிப்போனார்கள்

.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொல்லம் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுசூதனனை கைது செய்தனர். குடும்ப தகராறில் மகளின் கண் எதிரே கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

தகவல் : ONEINDIA

You may also like

Leave a Comment