Home Uncategorizedமகனை கஞ்சா வழக்கில் கைது செய்த போலிசார்… காவல்நிலையத்தின் முன் தீக்குளித்த தந்தை

மகனை கஞ்சா வழக்கில் கைது செய்த போலிசார்… காவல்நிலையத்தின் முன் தீக்குளித்த தந்தை

by bait
0 comments

கைது செய்தவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக மகனை கைது செய்ததை கண்டித்து காவல்நிலையத்தில் தந்தை தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் மணி பரத் என்ற இரண்டு இளைஞர்களை கஞ்சாவுடன் கைது செய்தனர். இதை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment