நடிகர் கஞ்சா கருப்பு போரூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் வரவில்லை என போராட்டம்.

சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்கு வந்த நிலையில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி இதனால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டு மருத்துவர்கள் பணியில் இருந்ததாக மாநகராட்சி சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. ஒரு மருத்துவர் மட்டுமே சிறிது காலதாமதமாக வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் : NEWS18TAMIL
