Home Uncategorizedcheck-போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் தாக்கப்பட்டு மரணம்..!

check-போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் தாக்கப்பட்டு மரணம்..!

by bait
0 comments

சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விஜய் (27) என்பவர் மதுபோதைக்கு அடிமையானதை தொடர்ந்து, இவரது குடும்பத்தினர் சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் உள்ள கிரீன் லைப் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் இவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நவம்பர் 25 ஆம் தேதி விஜய் இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு மறுவாழ்வு மையதிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இறந்ததில் சந்தேமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மறுவாழ்வு மையத்திற்கு சென்ற போலீசார் அங்கு உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது குறிப்பிட்ட நாளுக்கான பதிவுகள் மட்டும் அழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் விஜயின் உடலில் காயங்கள் இருந்ததை தொடர்ந்து, மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் விஜய் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் : RAJNEWS

banner

You may also like

Leave a Comment