Home Uncategorizedபோதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்!

போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பியோட்டம்!

by bait
0 comments

சென்னை திருவேற்காட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்துவிட்டு 17 பேர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து திருவேற்காடு மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் பிளசன் பவுன்டேஷன் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் வைத்து நடத்தி வருகிறார். இதில், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

வெள்ளிக்கிழமை அதிகாலை போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் சிலர் ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சம்பவம் குறித்து அறிந்து வந்த திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தியதில், 17 பேர் தப்பியோடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 8 பேர் அவர்களாகவே மறுவாழ்வு மையத்திற்கு திரும்பி வந்துவிட்டனர்.

மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் போலீசார் மற்றும் மறுவாழ்வு மைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் திடீரென தப்பியோட காரணம் என்ன அவர்கள் மீது நடந்தப்பட்டதா? அவர்களுக்கு வேறு ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் போதை மறுவாழ்வு மையத்தில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment